Saturday, May 2

எல்லாம் தல விதி - நகைச்சுவை கவிதை

பல வருடங்களுக்கு முன்பு கவிதை எழுத சொல்லி கேட்டபோது நான் வெறுப்பில் எழுதிய கிறுக்கல் இது. வெகு நாட்கள் கழித்து படிக்கும்போது எனக்கே சிரிப்பு வந்தது. என்னுடைய வெறுப்பு இத்தனை நகைச்சுவையாக இருக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. என் அறியாமையை கண்டு நீங்களும் சிரியுங்கள். Click here to read this in Tanglish (Tamil transliterated to English)



எல்லாம் தல விதி

போனா போகட்டும்னு பொழைக்க விட்டா
போடா பொட்ட-னு எட்டி மிதிக்கிறான் 
பிச்ச எடுத்தவனுக்கு உதவி பண்ணா
பள பள-னு புதுசா பாத்திரம் வாங்குறான் (பிச்ச எடுக்கத்தான்)

ஒரு ஊர்ல ஒரு ராணி இருந்தா
ஓயாம அவ அழுதுட்டு இருந்தா 
ஊரெல்லாம் தெரண்டு வந்து என்னான்னு கேட்டா 
கொய்யால உங்களுக்கு என்னனு சொல்லிபுட்டா

தண்ணீர் தண்ணீர்-னு கத்தினா 
ஒரு துளி கூட எங்கேந்தும் வராது
தருதல புள்ளைய பெத்துப்போட்டா
தவுட்டுக்கு கூட விக்க முடியாது.

ஆண்டவன்கிட்ட வேண்டுனா மட்டும் 
ஆடி மாச காத்து நிக்குமா 
அப்பன் பேச்ச கேக்கலேன்னா
அம்பது பைசா மிஞ்சுமா

பப்பரப்பான்னு பாய விரிச்சுபுட்டு
பாலையும் வயுறு முட்ட குடிச்சுபுட்டு 
பாத்தரத்துல பால் மிஞ்சினா - அது
பன்னி மூத்திரம் மாரிதான் தெரியும்

சிங்கத்த குகைல போய் சொரண்டினாலும் 
சிறுத்தைய சீரிப்போய் புடிச்சாலும்
சாவு உனக்குத்தாண்டி மாப்ள
சங்கு ஊதக்கூட ஆளில்ல.

ஓயாம பேசுற பொண்ணுகிட்டையும்
ஓலைப்பாயில ஒண்ணுக்கு அடிக்கிற பையன்கிட்டயும் 
அமைதியா இருங்கப்பா-னு அழுத்தி சொன்னா
உனக்கு இருக்குற அமைதியும் போய்டும்

உக்காந்திருக்குறவனுக்கு நிக்கிறவன் மேல பொறாம
நிக்கிறவனுக்கு நடக்குறவன் மேல பொறாம
நடக்குறவனுக்கு ஓடுறவன் மேல பொறாம
ஓடுறவனுக்கு உக்காந்திருக்குறவன் மேல பொறாம

நல்ல பசங்க நல்லா இருந்தா 
நாதாரிங்க உயிர எடுக்குறானுங்க 
நல்லவங்களும் நாதாரிகளான 
நாடு நிச்சயமா உருப்படாதுங்க

ஐஸ்வர்யா ராயும் அம்மாவுக்கு பொண்ணுதான்
உடைச்சதுக்கு அப்புறம் கல்லு கூட மண்ணுதான்
வெளிச்சம் கூட குருடனுக்கு இருட்டுதான்
இது எல்லாமே தேவையில்லா கருத்துதான்.

நன்றி வணக்கம்.